Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மக்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்கள் இருக்குமிடம் தேடிச் சென்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதில் இதுவரை 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 7வது முறையாக மெகா தடுப்பூசி முகாமிற்கு அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது. 50 ஆயிரம் இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 45 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |