Categories
மாநில செய்திகள்

பட்டாசு விற்பனைக்கு இவர்களை பணியமர்த்த கூடாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் கொரோணா பரவும் அபாயம் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் நடைபெற உள்ளதால் பட்டாசு விற்பனைக்கு நியாய விலை கடை விற்பனையாளரை  பணி அமர்த்த கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பண்டகசாலை கொள்முதல் செய்யாத பட்டாசு வகைகள் விற்பனை செய்யக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |