Categories
மாநில செய்திகள்

தற்காலிக பணிநீக்கம் கிடையாது… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டமன்றத்தில் கடந்த மாதம் 7ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கத்தில் வைக்கும் நடைமுறை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யும் போது பல்வேறு ஊதிய சலுகைகளை பெற முடியாமல் போய்விடுகிறது. எனவே குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகள், அவர்கள் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை ஒழுங்கு நடவடிக்கைகள் குழு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது போன்ற சமயங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு அனுமதித்து, அதன்பிறகு தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வழிவகை செய்து தரப்பட வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |