தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி காரைக்கால் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. அதேபோல் நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் அன்றும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நவம்பர் 2ஆம் தேதி கல்லறை தினம் வருவதால் அன்றும், 3, 4 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மட்டும் தீபாவளிக்கு பிறகு வெள்ளி, சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருக்கும் என்றும், இதர வகுப்புகளுக்கு முழு விடுமுறை எனவும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார். வரும் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.