பிரிட்டனில் பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த வைரம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
Northumberlandஇல் வாழும், 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது பழைய பொருட்களை எல்லாம் குப்பை தொட்டியில் போட சென்றுள்ளார். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரர் குப்பைத் தொட்டியில் போடாமல் பழைய கடையில் விற்கலாம் என்று அறிவுரை கூறவே, அந்தப் பெண் தனது பழைய பொருட்களையும் இதனுடன் சேர்த்து கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பழைய நகையுடன் ஒரு பவுன்ட் நாணயத்தை விட பெரிய கல் இருந்ததை கடைக்காரர் கவனித்தார். இதைப் பார்த்த கடைக்காரர் போலி வைரம் என்று நினைத்து மூன்று நாட்கள் அதை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்ததில் அது உண்மையான வைரம் என்று அவருக்குத் தோன்றியது.
உடனே, லண்டனில் உள்ள நிபுணர்களுக்கு அனுப்பிய அவர் அதை ஆய்வு செய்து 34.19 காரட் எடை கொண்ட மிக உயரமான வைரம் என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் மதிப்பு 2 மில்லியன் பவுண்டுகள்! மேலும் என்னைப் பற்றிய விவரங்களை தயவு செய்து ரகசியமாக வைக்குமாறு கடைக்காரரிடம் அப்பெண் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விலைமதிப்பற்ற அரிய வைரம் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.