Categories
உலக செய்திகள்

கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…. தேவாலயங்கள் மீது தாக்குதல்கள்…. வருகை தரும் போப்பாண்டவர்….!!

உண்டுறை பள்ளிகளின் அருகே நூற்றுக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடா நாட்டின் உண்டுறை பள்ளிகள் அருகே நூற்றுக்கணக்கான பூர்வகுடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு அவர்களது கலாச்சாரமும், மொழியும் பறிக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் ஆவர். இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்த செய்திகூட பெற்றோருக்குக் கூறப்படாமல் ஆளுக்கொரு பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை என்ற ஒரு அடிப்படை அடையாளம் கூட இன்றி பள்ளிகளுக்கு அருகிலேயே புதைக்கப்பட்டு இருந்தார்கள்.

ஆகவே இதுபோன்று பல நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் உடல்கள் சுமார் 1,1000 உண்டுறை பள்ளிகளின் அருகே தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருப்பது மக்களிடையில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளிகள் கத்தோலிக்க சபைகளில் பொறுப்பின் கீழ் இருந்தவை என்பதால், மக்களின் கோபம் அதன் தேவாலயங்கள் பக்கம் திரும்பியது. இதில் சில இடங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றது. இந்த நிலையில் பூர்வக்குடியின தலைவர் RoseAnne Archibald, அந்த திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் கனடா நாட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதேபோன்று கனடா அரசியல்வாதிகள் திருச்சபையின் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது, பூர்வகுடியினரில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். மேலும் பள்ளி ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் போப் பிரான்சிஸ் கனடாவுக்கு வருகை புரிய இருக்கின்றார். ஆனால் அவர் கனடா வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே பலமுறை கனேடியர்கள் போப்பாண்டவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர் இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |