Categories
அரசியல்

“பட்டபடிப்புக்கு பண வசதியில்லை” கடிதம் எழுதிய மாணவி…. நெகிழ்ச்சியடைய செய்த முதல்வர்….!!

மதுரை மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி ஷோபனா கல்லூரி படிப்பிற்கு தனக்கு பணம் வசதி இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ளதாக தமிழக முதல்வருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் அம்மாணவி பிபிஏ பட்டப்படிப்பு படிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். முதல்வர் தாய் உள்ளத்துடன் செய்த உதவிக்கு சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிக்கும் அளவிற்கு தன்னிடம் பணவசதி இல்லை என்று மாணவி மீண்டும் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில் பல்வேறு அரசு திட்ட பணிகளின் ஆய்வு பணிக்காக மதுரை சென்று உள்ள தமிழக முதல்வர் தனது அரசு வாகனத்தை திருவேங்கடம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து அம்மாணவி செல்வி ஷோபனா மற்றும் அவரது குடும்பத்தினரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர். அப்பொழுது அந்த மாணவியின் பட்டப் படிப்புக்கு உதவியாக உள்ள புத்தகங்கள், புத்தகப்பையை, கல்வி உபகரணம் மற்றும் நிதி உதவி வழங்கி முதல்வர் வாழ்த்தினர். இந்நிகழ்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு மூர்த்தி உடன் இருந்தனர்.

Categories

Tech |