Categories
தேசிய செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” மூன்று நாட்கள் மட்டும்…. ரேஷன் கடைகள் நேரம் மாற்றம்…. தவற விட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!

நியாயவிலை கடைகளில் மளிகை
பொருட்கள் வாங்காமல் தவற விட்டவர்கள் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 34 ஆயிரத்து 673 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மொத்தம் 243 குடோன்களும் 309 மண்ணெண்ணெய் பங்குகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 6.95 கோடி பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் மூலம் 35 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோக முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டை, பொருட்களில் இல்ல குடும்ப அட்டை என மொத்தம் ஐந்து வகையாக குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொங்கல் பண்டிகை காலங்களில் இலவச மளிகைப் பொருட்களோடு ரொக்கமும் அளிக்கப்படுகிறது. இதற்காக குடும்ப அட்டை வாங்குவதில் மக்கள் போட்டி போட்டு கொண்டு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அரசு தொடங்கியுள்ள இ சேவை மையங்களில் எளிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பொருட்கள் வாங்கிக் கொள்வதற்காக நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அரசு அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்காக வரும் 1,2,3ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தீபாவளிக்கு முன்னர் பொருட்கள் வாங்க இயலாத பயனாளிகள் தீபாவளி முடிந்த பிறகு அதாவது வரும் ஏழாம் தேதி மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |