Categories
மாநில செய்திகள்

BREAKING :  இந்த 4 மாவட்டங்களுக்கு… இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’….!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது உருவாகியுள்ளது.  இதன் காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சத்தீவு, மாலத்தீவு ,அரபிக்கடல், கேரள கடல் பகுதிக்கு நவம்பர் 3ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், குமரிக்கடல் , மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு நவம்பர் 1ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |