புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி கேட்டு 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்காம் நகரைச் சேர்ந்த ராகுல் (21) என்பவர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர்.
புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ராகுல் துக்கம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் முனியப்பன், பரசுராம் ஆகியோர் புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.