நவம்பர் 4ஆம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நவம்பர் 4-ம் தேதி மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளை மூட போடப்பட்டுள்ள உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடியிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Categories