தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆயிரத்து 968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. அந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு நாள் என அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். பேரறிஞர் அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு எனப் பெயரிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories