Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்…. 4 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்….!!

பாகிஸ்தான் பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வடக்கே நசீமாபாத் பகுதியின் அருகே பெட்ரோல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் திடீரென சிலிண்டர் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த சிலிண்டர் வெடிப்பில் 4 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த தகவலை பாகிஸ்தான் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். அதோடு இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும் தெரிவித்தனர்.  தற்போது, சிலிண்டர் வெடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |