Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…. தீபாவளியன்று ஆஸ்தானம்…. வெளியான தகவல்….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 4-ஆம் தேதி தீபாவளியன்று ஆஸ்தானம் நடக்கவிருக்கிறது. அன்று அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், கைங்கரியம் போன்றவை நடக்கிறது. இதையடுத்து தங்க வாசல் எதிரே உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணி முதல் 9 மணிவரை தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது.

அதன்பின்னர் ஏழுமலையானுக்கு பிரதான அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, ஆர்த்தி காண்பித்து, பிரசாதம் வழங்கி தீபாவளி ஆஸ்தானத்தை நிறைவு செய்ய உள்ளனர். மேலும் மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை ஸ்ரீ தேவி பூதேவி சமேத மலையப்ப சாமிக்கு சகஸ்கர தீப அலங்கார சேவை நடக்க உள்ளது.

Categories

Tech |