ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து கார் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கல் என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் வந்த நபர்கள் உடனடியாக கீழே இறங்கினர். அதன்பின் சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் அந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.