கொச்சி: மலையாள வாரிசு நடிகர்களின் பட்டியலில் புதிதாக திரையுலகில் களமிறங்க தயாராகி வருகிறார் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் ஜெயராம். நன்கு தமிழ் பேசும் இவர் ஏராளமான தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். மலையாள நடிகை பார்வதியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் உள்ளார்கள்.
தனது மகன் காளிதாஸை கோலிவுட்டில் மீன் குழம்பும் மன் பானையும் என்ற படம் மூலம் அறிமுகம் செய்தார் ஜெயராம். இதன் பின்னர் மலையாளத்தில் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்துள்ளார் காளிதாஸ். இவர் நடித்த கொச்சு கொச்சு சந்தோஷங்கள் சிறந்த மலையாளப் பாடமாக தேசிய விருதை பெற்றது.
https://www.instagram.com/p/B4Hp4_kDggo/?utm_source=ig_web_button_share_sheet
இதையடுத்து ஜெயராமின் மகள் மாளவிகா தற்போது திரையுலகில் களமிறங்க தயாராகியுள்ளார். தற்போது அவர் மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், கொச்சியிலுள்ள பிரபல பொட்டிக் ஸ்டோருக்கு மாடலிங் செய்துள்ள இவர் அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த தீபாவளியில் புதிய வாழ்வின் புதிய பகுதியில் நுழைந்துள்ளேன். ஃபேஷன் துறையில் அடியெடுத்து வைத்து குழந்தைப் போல் எனது கையைப் பிடித்து நடக்கத் வைத்துக்கொண்டிருக்கு அனைவரும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B4hod7MDr1z/?utm_source=ig_web_button_share_sheet
வெளிநாட்டில் படித்து வந்த மாளவிகா இந்தியா திரும்பியதும் மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார். இதையடுத்து விரைவில் அவர் படங்களில் நடிப்பார் எனவும் தகவல்கள் பரவி வரும் நிலையில், நல்ல கதை அமைந்தால் படங்களில் நடிக்க மாளவிகா தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மலையாளத் திரையுலகில் வாரிசு நடிகர்களாக இயக்குநர் ஃபசில் மகன் ஃபஹத் பாசில், மம்முட்டி மகன் துல்கர் சல்மான் உள்ளிட்ட சிலர் ஜொலித்து வரும் நிலையில், விரைவில் மாளவிகாவும் அந்த லிஸ்டில் இணையவுள்ளார்.
https://www.instagram.com/p/B4fInq5DK1x/?utm_source=ig_web_button_share_sheet