Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாமனார் கொடுத்த நிலத்தை தாங்க” பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிலத்தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொக்கலாடி அரக்கரை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களுக்கு முன்பு கொக்கலாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் தனது நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்துள்ளார். ஆனால் வேலாயுதம் மற்றும் ராமமூர்த்தி 2 பேருமே தற்போது உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் வேலாயுதம் மருமகள் விமலா தனது மாமனார் கொடுத்த நிலத்தை திருப்பி தருமாறு ராமமூர்த்தி மகன் ரவி மற்றும் அவரது மனைவி ரேணுகாவிடம் கேட்டுள்ளார். அதற்கு கணவன்- மனைவி இருவரும் நிலத்தை திருப்பி தர முடியாது என விமலாவிடம் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.

இந்த நிலையில் விமலா அந்த நிலத்தில் வேலி அமைத்து விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கணவன்- மனைவி மற்றும் ரவியின் சகோதரர்கள் கண்ணன், முத்துராஜா, மனோன்மணி போன்றோர் சம்பவ இடத்திற்கு வந்து விமலா நிலத்தில் வைத்திருந்த வேலியை பிரித்துள்ளனர். அப்போது விமலா மற்றும் ரேணுகா தரப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது இருதரப்பினரும் அரிவாள், கத்தியுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலின்போது கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த விமலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுதொடர்பாக தகவலறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மோதலில் பலத்த காயமடைந்த ரவியின் சகோதரர் மனோன்மணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரேணுகா அவரது கணவர் ரவி மற்றும் சகோதரர்கள் கண்ணன், முத்துராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |