Categories
தேசிய செய்திகள்

ஜெயிலில் கிடைத்த நட்பு… பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க வந்த ஆசாமிகள்…!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நள்ளிரவில் கொள்ளையடிக்க சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஏடிஎம் மிஷின் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் சில நின்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களை சோதனை செய்தபோது இடுப்பில் இரும்பு பைப்பும், இரும்புக் கம்பியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் சுமையை சுமேஷ், நவீன், சுரேஷ், நிசார்  என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஏற்கனவே தனித்தனியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது நண்பர்களாகி பின்னர் சேர்ந்து  கொள்ளையடிக்க முடிவு செய்தது தெரியவந்தது. உரிய நேரத்தில் காவல் துறையினர் செயல்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் திருட்டு தடுக்கப்பட்டது.

Categories

Tech |