Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி…. 2-முறை வாலிபரின் துணிச்சலான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்தியதாக வாலிபர் 2-வது முறை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள விளக்குடி மேலத்தெருவில் மகேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விக்னேஷ் கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 05/02/2011-ம் ஆண்டு விக்னேஷ் கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை கடத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து விக்னேஷ் கண்ணன் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் கண்ணன் கடந்த 28/6/2021-ம் ஆண்டு அதே சிறுமியிடம் மீண்டும் ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விக்னேஷ் கண்ணனை வலைவீசி தேடிவந்தனர். இதனைதொடர்ந்து கடந்த 28-ம் தேதி ராயநல்லூர் பகுதியில் விக்னேஷ் கண்ணன் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதுங்கியிருந்த விக்னேஷ் கண்ணனை கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின் காவல்துறையினர் 2-வது முறை போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |