2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கிகுளம் பகுதியில் ஐகோர்ட் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இதனையடுத்து பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் பேட்டை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.