மோட்டார்சைக்கிள்-ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் தங்கபாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒர்க் ஷாப் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தங்கபாபு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தங்கபாபு பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் தங்கபாபுவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கபாபு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.