நடிகை சமந்தா பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். தற்போது இவர் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யாவுடன் இருந்த புகைப்படங்களை நீக்கிய சமந்தா, சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு சமந்தா அறிவுரை வழங்கி இருக்கிறார். அதில் ‘உங்கள் மகள் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு அவளை வலிமையானவளாக தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்கு பணம் சேர்த்து வைப்பதற்கு பதில் அதை அவளது கல்விக்கு செலவிடுங்கள். அவளை திருமணத்திற்கு தயார் செய்வதற்கு பதில் அவளை அவளாகவே தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.