Categories
சினிமா தமிழ் சினிமா

தனது புதிய படத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு….!!

அனிதா சம்பத் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் வாசிக்கும் செய்திகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவருக்கு பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், தனது புதிய படம் குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். அதன்படி, இவர் ரவுடி பேபி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், மீனா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CVpkY41P-6t/

Categories

Tech |