Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “மனக் குழப்பங்கள் தீரும்”… பயம் கொஞ்சம் இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாராளமாக செலவிட்டு மகிழும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்யக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று மனக் குழப்பங்கள் தீரும். எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.

இன்று உடல்நிலையில் கவனம் இருக்கட்டும். ஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். பெரியவர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவிகள் செய்து நல்லதை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும்.

இருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்தி படிப்பது மிகவும் சிறப்பு. இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிறம் சிறப்பு நிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தை பயன்படுத்தி செல்வத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அன்ன அபிஷேகத்தை கண்டு களியுங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |