பிக்பாஸ் 5 யில் இந்த வாரம் சின்னப்பொண்ணு எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இரண்டாவதாக அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அக்ஷ்ரா ரெட்டி, பவானி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, வருண் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் சின்னப்பொண்ணு எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Chinna Ponnu Eliminated #biggbosstamil #Biggbosstamil5 #Chinnaponnu pic.twitter.com/e2LmL58yqy
— Imadh (@MSimath) October 30, 2021