Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸுக்கு புது தலைவலி….! கட்சி பார்த்துகிட்டு இருக்கு…! நான் அப்படி சொல்லல… நீங்களா போட்டுறாதீங்க…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா உணவகம் கொரோனா காலத்தில் எந்தவிதத்தில் உதவியது. இன்றைக்கு மக்களுக்கு உதவி செய்கின்ற வகையிலும் அதே நேரத்தில் குறைந்த விலையில் இட்லி பார்த்தால் விலை குறைவு 1 ரூபாய் இட்லி, இரண்டு சப்பாத்தி 3 ரூபாய் அதுமாதிரி மக்கள் பசியாற கொண்டு வந்த திட்டம் தான். அந்த திட்டத்தை நல்ல பெயர் மக்களிடத்தில் எடுத்து கொண்டிருக்கும் வேளையில் அதற்கு மூடு விழா செய்துவிட வேண்டும் என்பதற்காக பெண்களுக்கு பாதி சம்பளத்தை குறைத்து விட்டார்கள்.

தரம் குறைந்த ரேஷன் அம்மா உணவகம் வழங்கப்படுகிறது .சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் இன்றைக்கு தரம் குறைந்த ரேஷன் வழங்குறீர்கள். நீங்கள் அம்மா உணவகத்திற்கு கேட்ட பெயர் ஏற்படுத்தி மூடுவதற்காக இது போன்ற சதி செய்கின்றிர்கள் என்று பெண்கள் சென்று கேட்டதற்காக அவர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளனர். எப்படி பட்ட ஒரு ஜனநாயக விரோத செயல் மக்களுடைய குரலுக்கு செவி சாய்க்காத ஒரு மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஒரு அரசாங்கம் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது தான் இன்றைக்கு வேதனையாக இருக்கின்றது என தெரிவித்தார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், ஓபிஎஸ் சகோதரர் ராஜா டிடிவி தினகரனை சந்தித்துள்ளார் அவருடன் தொடர்பில் உள்ளார். ஆகவே அவரை கட்சியிலிருந்து நீக்கி விடுவீர்களா? என கேள்வி கேட்டனர். அப்போது பதிலளித்த அவர்,  பொதுவாகவே நீங்கள் சொல்வதை கட்சி கருத்தில் எடுத்து கொள்ளும். உடனே நான் சொல்வதை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று நீங்களாக தலைப்பு செய்தி போட்டு விடாதீர்கள்.என்னைப் பொறுத்தவரை நீங்கள் கேட்கின்ற கேள்வியை நான் சொல்கிறேன்.அது முழுமையாக கட்சி பார்த்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |