Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின் இணைப்பு ஆணை…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அமைச்சரின் செயல்….!!

390 நபர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 190 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் துணிநூல் மற்றும் தொழில்துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கி சிறப்பு உரை ஆற்றியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1606 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது முதல் கட்டமாக 390 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் பத்து வருடங்களுக்கும் அதிகமாக மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருந்து வருவதை கருத்தில் கொண்டு ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கான இலவச மின் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். பின்னர் மீதமிருக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என கூறியுள்ளார்.

இதனையடுத்து மின்சார வாரியத்தில் பணியின் போது இறந்த 4 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் காந்தி வழங்கியுள்ளார். பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் விபத்து நிவாரண நிதி உதவி தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதனையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா புடவைகளை வழங்கும் திட்டத்தையும் தற்போது தொடங்கி வைத்திருக்கிறார். இவற்றில் முன்னதாகவே வாலாஜா ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மரை அமைச்சர் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

Categories

Tech |