Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகமது தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, வேளாண் அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா, நேஷனல் விமன் பிரண்ட் மாவட்ட பேச்சாளர் சலீமா ஆலிமா, அகில இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணைத் தலைவர் மீரான் அன்வாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அதில் திரிபுராவில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்தும், வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |