Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள்”… பார்த்து பேசுவது நல்லது..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தடைகளும், தன விரயமும் கொஞ்சம் ஏற்படலாம். உடன் இருப்பவரிடம் கவனமாகவே நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஆகையால் குடும்பத்தாரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் கொஞ்சம் குறையும். எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பேசுவது நல்லது. தாய் தந்தையரின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள்.

பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் சேருவார்கள். அதுபோலவே  பங்குச் சந்தையிலும் உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு படுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கு தயங்க மாட்டீர்கள். இருந்தாலும் பொறுமையாக இருங்கள் பின்னர் செய்து கொள்ளலாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கடன்கள் மட்டும் ன்று வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

தயவுசெய்து ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். கூடுமான வரை படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். இன்று அன்னாபிஷேகம் பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வநிலை என்றும் குறையாது.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |