இன்றைய தின நிகழ்வுகள்
683 – மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது.
802 – பைசாந்தியப் பேரரசி ஐரீன் பதவியில் இருந்தௌ அகற்றப்பட்டார். பதிலாக நிதி அமைச்சர் நிக்கபோரசு பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1803 – கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர்.[1]
1863 – நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் “வைக்காட்டொ” என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது.
1864 – நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.
1903 – அமெரிக்கா, இந்தியானாபொலிசில் தொடருந்து விபத்தில் 17 உயிரிழந்தனர்.
1913 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி 1867 ஒப்பந்தம் கைவிடப்பட்டு, அங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது.
1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.
1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டை முடிவுற்றது. ஐக்கிய இராச்சியம் செருமனியின் முற்றுகையை முறியடித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐசுலாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை செருமனியப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1954 – அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 – சூயெசு நெருக்கடி: ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு சூயசு கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1961 – ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1963 – இந்தியானாபொலிசில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற புரொப்பேன் தாங்கி வெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1968 – வியட்நாம் போர்: பாரிசு அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.
1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.
1979 – மெக்சிக்கோ நகரில் வெசுட்டர்ன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1996 – பிரேசில், சாவோ பாவுலோவில் டாம் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
1999 – ஜெசி மார்ட்டின் 11 மாதங்கள் பாய்க்கப்பலில் தனியே இடை விடாது உலகைச் சுற்றி வந்து மெல்பேர்ண் திரும்பினார்.
1999 – எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.
2000 – சோயுசு டிஎம்-31 விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் நடத்துவதற்கான முதலாவது குழுவினரை ஏற்றிச் சென்றது.
2000 – சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்பெய் நகரில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
2003 – 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார். இவர் 2018 இல் மீண்டும் தனது 92-வது அகவையில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 – உலக மக்கள் தொகை ஏழு பில்லியனைத் தாண்டியது.
2015 – மெட்ரோஜெட் விமானம் 9268 வடக்கு சினாயில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர்.
2017 – நியூயார்க் நகரில் சுமையுந்து ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
2018 – ஒற்றுமைக்கான சிலை குசராத்து மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய தின பிறப்புகள்
1711 – லாரா மரியா, இத்தாலிய மருத்துவர், இயற்பியலாளர் (இ. 1778)
1760 – ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (இ. 1849)
1795 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கலைஞர் (இ. 1821)
1815 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (இ. 1897)
1828 – ஜோசப் வில்சன் ஸ்வான், ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1914)
1861 – நாராயண ஐயங்கார், தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (இ. 1947)
1875 – வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி (இ. 1950)
1887 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1975)
1918 – இயான் ஸ்டீவன்சன், அமெரிக்க உளவியலாளர் (இ. 2007)
1922 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (இ. 2012)
1925 – லாரன்ஸ் ஏ க்ரீம், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1990)
1929 – முக்தா சீனிவாசன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
1930 – மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2021)
1933 – துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்
1943 – உம்மன் சாண்டி, கேரள அரசியல்வாதி, முதலமைச்சர்
1961 – சர்பானந்த சோனாவால், அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர்
1961 – பீட்டர் ஜாக்சன்,நியூசிலாந்து நடிகர்
1986 – சம்விருதா சுனில், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகை
இன்றைய தின இறப்புகள்
1926 – ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க மாயவித்தைக் காரர் (பி. 1874)
1929 – நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (பி. 1877)
1962 – கேபிரியேல் இரெனவுதோத் பிளம்மாரியன், பிரென்சு வானியலாளர் (பி. 1877)
1975 – எஸ். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் (பி. 1906)
1984 – இந்திரா காந்தி, இந்தியாவின் 3வது பிரதமர் (பி. 1917)
1990 – எம். எல். வசந்தகுமாரி, திரைப்பட, கருநாடக இசைப்பாடகி (பி, 1928)
1993 – பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலிய இயக்குநர் (பி. 1920)
1999 – ஜான் வெய்ன்ரைட் எவான்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1909)
2003 – செம்மங்குடி சீனிவாச ஐயர், இந்தியக் கருநாடக இசைப் பாடகர் (பி. 1908)
2005 – பி. லீலா, பின்னணிப் பாடகி (பி. 1934)
2006 – அம்ரிதா பிரீதம், பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (பி. 1919)
2013 – ராதா பர்னியர், பிரம்மஞானசபையின் தலைவி (பி. 1923)