சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாகவே இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தடை தாமதங்கள் இன்று அகலும். மன ஆறுதல் தரும் விஷயத்தில் ஒரு பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலைகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சக ஊழியருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர்களுக்கு திருமணம் முடியும். இன்று குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் அது போதும். நன்மையை நாம் பெறலாம். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி காணப்படும். செய்கின்ற வேலையை மட்டும் கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்தால் தான் பாடத்தை படிக்க வேண்டும்.
தயவுசெய்து பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். அந்த அபிஷேகத்தை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே வற்றாத செல்வம் ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்