Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “மன குழப்பம் வேண்டாம்”… யோசித்து செய்யுங்கள்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். உத்தியோக முயற்சி வெற்றியை கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் மன குழப்பம் வேண்டாம். பொறுமையாக யோசித்து செய்யுங்கள் அது போதும். வாங்கல் கொடுக்கல் களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உருவாகும். சமாளித்து முன்னேறும் திறமையும் இருக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைப்பீர்கள். போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். பண வரவு இருக்கும். உறவினரால் அதிக அனுகூலமும் இருக்கும். கஷ்டங்கள் குறையும். வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனம் நிம்மதியாக காணப்படும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். நட்பு வட்டம் விரிவடையும். வி ஐ பி களின் சந்திப்பு கிடைக்கும்.

இன்று அனைத்து விதமான விஷயங்களிலும் உங்களுக்கு நன்மை நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அதிஸ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மஹா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வத்தைக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |