தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியன்று தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளைத் திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களை சுற்றியுள்ள இறைச்சி கடைகள் தீபாவளியன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
Categories