சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும்படி சென்னை மக்களை பெருநகர் குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பணிமனை வசூல் மையங்களும் அக்டோபர் 31ஆம் தேதி வரை இயங்கும். மக்கள் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணைய முகவரியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குடிநீர் வரி கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள். எனவே பொதுமக்கள் குடிநீர் வரியை தவறாமல் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அழைத்து பணி மலைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வரி செலுத்த முடியும்.