Categories
தேசிய செய்திகள்

பென்ஷன்தாரர்களே…. வீடியோ கால் மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?….. வாங்க பார்க்கலாம்….!!!!

பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அது தற்போது மிக எளிதாகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால்காரர் உங்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வீடியோ கால் மூலமாயும் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இனி பென்ஷன் வாங்குவோர் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆய்வு சான்றிதழை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே இந்த வேலையை முடித்துவிடலாம்.

அது எப்படி?

முதலில் நீங்கள் https://www.pensionseva.sbi/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.

அதில் ‘Video LC’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு SBI பென்சன் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.

இப்போது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படித்துவிட்டு, ‘Start Journey’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்ததாக, பான் கார்டை கையில் வைத்துக்கொண்டு, ‘I am ready’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அதன் பிறகு வீடியோ அழைப்பைத் தொடங்க அனுமதி கொடுக்க வேண்டும்.

SBI அதிகாரி இணைந்தவுடன் உங்கள் வீடியோ அழைப்பு தொடங்கும். இதற்கான நேரத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

வீடியோ அழைப்பு தொடங்கியவுடன், உங்கள் திரையில் காட்டப்படும் நான்கு இலக்க எண்ணைப் படிக்குமாறு அதிகாரிகள் கேட்பார்கள்.

உங்களுடைய பான் கார்டைக் காட்ட வேண்டியிருக்கும். இதற்குப் பிறகு உங்களது புகைப்படம் எடுத்துக்கொள்ளப்படும்.

இதோடு முடிந்துவிடும். ஒருவேளை இந்த செயல்முறை வெற்றிபெறவில்லை என்றால், வீடியோ அழைப்பு மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பென்சன் பெறுபவர் வங்கிக் கிளைக்கு நேராகச் சென்றுதான் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும்.

Categories

Tech |