Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு 2ஆம் இடம்…. எதில் தெரியுமா….? மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை…!!!!

நாட்டில் 2020ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருந்தது. 1, 53,520 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2019ஆம் ஆண்டை விட  சுமார் 14 ஆயிரம் அதிகம் ஆகும் . நாள்தோறும் சராசரியாக 418 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 , 909 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 16,883 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14, 578 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2019ஆம் ஆண்டைப் போலவே இந்திய அளவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாட்டின் மொத்த தற்கொலைகளில் 11 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 3.1 விழுக்காடு தற்கொலைகள்தான் நடைபெற்றுள்ளது. பாலின அடிப்படையில் மொத்தத் தற்கொலைகளில் ஆண்கள் எண்ணிக்கை 70.9 விழுக்காடும், பெண்களின் எண்ணிக்கை 29.1 விழுக்காடுமாக உள்ளது. தற்கொலைக்கான காரணங்களில் குடும்ப பிரச்னை 33.6 விழுக்காடாக உள்ளது.

Categories

Tech |