Categories
மாநில செய்திகள்

நவம்பர் 5 ஆம் தேதி முதல்… 5 முதல் 10 வயது உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி…. அரசு வெளியிட்ட அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து நாளை முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் வழக்கமான நோய் எதிர்ப்பு தடுப்பூசியை உரிய காலத்தில் மாணவர்களுக்கு கிடைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில் அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காசநோய்-பிசிஜி, கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய் ஹெபடைடிஸ்பி, இளம்பிள்ளை வாத -ஓபிவி, ஐபிவி, கக்குவான் இருமல், ரணஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்சா தொற்று, கல்லீரல் தொற்று-பெண்டா, வயிற்றுப்போக்கு-ரேட்டா எம்.ஆர் தட்டம்மை, ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா நியூமோக்கால் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவி வருவதால் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி முதல் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு டிபிடி என்ற தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் மற்றும் ரணஜன்னி தடுப்பூசி செலுத்தவேண்டும். மேலும் 10 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ரணஜன்னி என்ற  தடுப்பூசியை செலுத்தப்பட வேண்டும். இந்த தடுப்பூசியை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செலுத்தப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |