Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 30 வரை…. தடை நீடிக்கும்…. விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு….!!

இந்தியாவில் நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஒன்றரை வருடங்களாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டவருக்காக மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்காண தடை அக்டோபர் 31-ஆம் தேதி அதாவது இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் தற்போது  விமான போக்குவரத்து இயக்குனரகம் வரும் நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |