Categories
சினிமா தமிழ் சினிமா

”உத்தம கலைஞனே பாட்ஷா போல் நடந்து வா”…. வைரமுத்து ட்விட்டர் பதிவு….!!

”உத்தம கலைஞனே பாட்ஷா போல் நடந்து வா” என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படையப்பா எழுந்து வா! பாட்ஷாபோல் நடந்து வா- ரஜினி விரைவில் குணமடைய வைரமுத்து  ட்வீட் | Vairamuthu wishes for speedy recovery of Rajinikanth - Tamil  Oneindia

இந்நிலையில், இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா. கலைவெளியை ஆண்டு வா. படையப்பா எழுந்து வா. பாட்ஷாபோல் நடந்து வா. வாழ்த்துகிறேன்”. என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |