தாய்லாந்தில் 30 ஆவது மாடியில் பணியாளர்கள் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த கட்டிடத்தின் விரிசலை சரிசெய்ய சாயம் அடிப்பவர்கள் தொங்கி கொண்டிருந்த கயிற்றை பெண் ஒருவர் அறுத்துள்ளார். மேலும் பெண்ணின் இந்த செயலுக்கு காரணம் என்னவென்றால், பழுதுபார்க்கும் வேலையை செய்ய பணியாளர்கள் வருவார்கள் என்ற தகவலை யாரும் இவருக்கு தெரிவிக்கவில்லை என்பதே ஆகும்.
இந்த பணியில், 32 ஆவது மாடியில் இருந்து சுவருக்கு சாயம் அடிப்பவர்கள் 3 பேர் கயிறு கட்டி கீழே இறங்கி 30 ஆவது மாடி வரை சென்றனர். பின்னர், கயிறு கனமாக இருப்பதை உணர்ந்து ஒருவர் கீழே பார்த்தபோது 21 ஆவது மாடியில் வசிக்கும் நபர் ஜன்னலை திறந்து, கயிற்றை அறுத்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில், 26 ஆவது மாடியில் வசிக்கும் Praphaiwan Setsing என்பவர் பணியாளர்கள் மூவரையும் ஜன்னல் வழியாக தனது வீட்டுக்குள் அனுமதித்து காப்பாற்றினார்.
இதனை தொடர்ந்து, கயிற்றை அறுத்த 34 வயதுதக்க அந்த பெண் மீது கொலை மற்றும் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 2 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர். மேலும், முதலில் குற்றச்சாட்டை மறுத்த பெண், துண்டிக்கப்பட்ட கயிற்றை கைரேகை மற்றும் DNA பகுப்பாய்வுக்காக போலீசார் அனுப்பியதும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அந்த பெண்ணை தற்காலிகமாக விடுவித்த போலீசார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.