இந்திய வம்சாவளியினர் 10,000 டாலர்கள் பரிசு வென்றதை அடுத்து கொள்ளையன் பணத்துக்காக அவரை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூஜெர்சியைச் சேர்ந்த பார்மா எக்சிகியூட்டிவான Sree Ranga Aravapalli என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிலதெல்பியாவில் உள்ள கேசினோ ஒன்றிற்கு சென்று இருக்கின்றார். அங்கு Sree Ranga Aravapalli 10,000 டாலர்களை பரிசாக பெற்றார். அதை கவனித்த ஒரு நபர் தனது காரில் Sree Ranga Aravapalli-ஐ பின்தொடர்ந்து சென்றிருக்கின்றார். இதனையடுத்து Sree Ranga Aravapalli வீட்டிற்கு வந்ததும் அவருக்கு தெரியாமல் பின்பக்க கதவு ஒன்றை உடைத்துக்கொண்டு அந்த நபர் உள்ளே நுழைந்துள்ளார். அதன்பின் அந்த நபர் Sree Ranga Aravapalli- ஐ சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இரண்டு நாட்களில் கொலையாளியான Jekai Reid-John என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “Jekai Reid-John-க்கு, Sree Ranga Aravapalli-ஐ யார் என்றே தெரியாது. இந்நிலையில் Sree Ranga Aravapalli கேசினோவில் பணம் வென்றதை Jekai Reid-John கவனித்துள்ளார். இதனால் பணத்திற்கு ஆசைப்பட்டு Sree Ranga Aravapalli-ஐ, Jekai Reid-John கொலை செய்துள்ளது” காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.