எரிமலையில் இருந்து வெளிவரும் தீ குழம்பைக் காண்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் கும்ப்ரே வியஜா என்ற எரிமலை 40 நாட்களுக்கு மேலாக தீ குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இதனால் அங்குள்ள 2200 ஏக்கருக்கும் அதிகமான பயிர் நிலங்கள் மற்றும் 2000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தஜீயா காட்சி முனை, தஜகோர்டெ துறைமுகம் போன்ற பகுதிகளில் இருந்தும் தீ குழம்பு வெளியேறுகின்றன.
இதனைக் காண சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இது போன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் எரிமலையால் பாதிக்கப்பட்ட லா பால்மா தீவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.