தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் தலையை வெளியிடுவதற்கு கனேடிய தபால் துறை இந்தியரை அணுகியுள்ளது.
40 வருடங்களுக்கு முன் கமல் ஷர்மா கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது கிறிஸ்துமஸ், ஈஸ்டர் முதலான பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. ஆனால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை என்று கமல் ஷர்மா கூறுகின்றார். இதுகுறித்து கமல் ஷர்மா கூறியபோது “1978 மற்றும் அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் சிலர் மட்டுமே தீபாவளி கொண்டாடினார்கள். அதுவும் வீட்டு அளவில் மட்டுமே கொண்டாடினார்கள். இந்நிலையில் தற்போது தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல்தலை ஒன்றை வெளியிட கனேடிய தபால் துறை முடிவு செய்துள்ளது. அதை உருவாக்குவதற்காக 1983 முதல் தெற்காசிய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தி சிலரின் ஆலோசனையை நாடியுள்ளது.
கடந்த 2017 முதல் இரண்டு முறை தீபாவளி அஞ்சல்தலைகளானது வெளியிடப்பட்டது. ஆனால் அது தொடர்பாக தெற்காசிய சமுதாயத்தினரை தபால்துறை நாடி உள்ளது இதுதான் முதல் முறையாகும். இது கனடாவில் அதிகளவில் காணப்படும் தெற்காசிய சமூகத்தினரின் முக்கியத்துவத்தை காட்டுவதாக நான் கருதுகிறேன். அதுமட்டுமின்றி இது கனடாவின் பெரும்பகுதிகளில் கொண்டாடப்படும் தீபாவளியையும் தெற்காசிய சமூகத்தையும் அங்கீகரிக்கும் ஒரு செயல் ஆகும்” என்று அவர் கூறினார். இதில் ஷர்மா சர்ரேயில் அமைந்துள்ள KVP Entertainers, KVP Heritage மற்றும் Kamal’s Video Palace ஆகிய நிறுவனங்களின் தலைவர் என்பதுடன், அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் முதலான பன்முகத்தன்மை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.