Categories
மாநில செய்திகள்

ரொம்ப சந்தோசமா இருக்கு…! உங்கள் பாசத்துக்காக உழைப்பேன்… செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மேற்கு தொகுதி துவரிமான் ஊராட்சியில் அமைந்திருக்கின்ற சக்தி மாரியம்மன் திருக்கோவிலினுடைய திடலில் அங்கு வருகிற பக்தகோடிகள் திருமணம், பொங்கல் நிகழ்ச்சி மற்றும் வைபவங்கள் நடத்த வேண்டும் என்ற பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு  பூமி பூஜை போட்டு  தொடங்கி வைத்துள்ளோம்.

வாஸ்து படி நல்ல நாள் என்பதால் அதன்  அடிப்படையில் பணியை  தொடக்கியுள்ளோம்.  ஏற்கனவே மண்டபங்கள், கும்பாவிஷேகம் போன்ற பல்வேறு பணிகள்  செய்திருக்கிறோம். இதில் நானும் என் குடும்பமும் இதில் கலந்து கொள்வது சக்திமாரியம்மன். இந்த ஊர் மக்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பு  பாசத்திற்கும்,  இந்த தலைவர்கள் கொண்டிருக்கிற பாசத்திற்கு, நான் என்றென்றும் அவர்களுக்கு  கடமைப்பட்டவன். அவர்களுக்காக உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன் என தெரிவித்தார்.

Categories

Tech |