கோவையில் எரிந்த நிலையில் ஆணின் எழும்புக்கூடு கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம் சோதனை சாவடிக்கு எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு இருப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில மாதங்கள் ஆன ஒரு மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்தது தடைய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
அவர்கள் வந்து தடயங்களை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர், எலும்பு மாதிரிகளை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் அந்த எலும்புக்கூடு ஒரு ஆணுடையது என்றும் அவருக்கு வயது 25 முதல் 30 வரை இருந்திருக்கலாம். எனவும், அவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.