Categories
அரசியல் மாநில செய்திகள்

பாரபட்சம் இல்லாமல் செய்யப்பட்டோம்.. எதுக்கு இப்படி பேசுறாருனு தெரியல ? வேதனைபட்ட செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுக ஆச்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது என்று அமைச்சர் மூர்த்தி குற்றசாட்டு எழுபினார் . அதை பற்றி  செல்லூர் ராஜு  பேசுகையில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறுவது  குற்றசாட்டு.  இதுவே  எங்க ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில் தான் இந்த அரசசு செயல்படுகின்றது. இந்த ஆட்சி வந்த பிறகு  நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே அவர் பேசுவதெல்லாம் தவறாக இருக்கிறது.

கொஞ்ச நாள் ஒழுங்காக தொழில் செய்து கொண்டிருந்தார்.பின்னர்  நகர்புற தேர்தல் வரவிருப்பதால் அவரும் பேச ஆரம்பித்து விட்டார். அவர் தொகுதியில் 247 கோடி ரூபாய்க்கு பாதாள சாக்கடை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும்  1000 கோடிக்கான உயர் மட்ட பாலம் வேலைகள் நடக்கிறது. 35 கோடி ரூபாய்க்கு மூன்று மாவடியில் இருந்து பனங்காடி வரை  இருவழி சாலைகள் ஏறத்தாழ 80 அடிக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

எங்களுடைய ஆட்சியில் மாண்புமிகு அம்மாவும் சரி, எடப்பாடியாரும் சரி  பாரபட்சம் இல்லாமல் அந்த தொகுதி மக்களுக்காக பணி ஆற்றினார்.தமிழக ,மக்களே அண்ணா திராவிட கழகதுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். எங்கள் ஆச்சி காலத்தில் இந்த தொகுதி, அந்த தொகுதி என பாராபட்சமே   பார்த்தது இல்லை. கொளத்தூர் தொகுதியில் அதிகமா நகரும் கடைகளை கொண்டுவந்தோம். எதற்காக இந்த கருத்தை மாண்புமிகு அமைச்சர் கூறினார் என்று  தெரியவில்லை.

Categories

Tech |