செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் இன்றைக்கு 5000 கோடி காண பணிகள் நடக்கிறது. 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள் நான் மற்றதெல்லாம் பேச விரும்பவில்லை. ஒன்றே ஒன்றுதான் அவர்களிடம் கேட்டுக் கொள்வது எங்களுடைய காலத்தில் 10 ஆயிரம் கோடிக்கான பணிகள் கடந்த பத்து ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்திருக்கோம்.
1296 கோடி ரூபாயில் மதிப்பு திட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தண்ணீரை கொண்டு வந்துள்ளோம். 40,50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாமால் இருக்கும். அதே போன்று இருவழிச் சாலை, வைகை ஆறு வரை அமைத்துள்ளோம். அதற்கு நிதி ஒதுக்கீடு பண்ணப்பட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும். இன்னும் சில பணிகள் முடிவடையாமல் இருக்கிறது. இவ்வாறு ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த பணிகளை அமைச்சர்கள் விரைவு படுத்த வேண்டும். கூடுதல் நிதி பெற்று மாண்புமிகு முதல்வரிடம் கூறி இவங்க காலத்தில் நல்ல செஞ்சிருக்காங்க, நம்ம ஆட்சியில் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள். மதுரை மாநகர் மாநகர் மாதிரி அல்ல. நீங்க தான் ஊடக பெருமக்கள், ஜனநாயகத்தின் காவலர்கள். நீங்க போய் பாக்குறீங்க…
எங்கு பார்த்தாலும் சாலை குண்டும் குழியுமா இருக்கு. எங்க ஆட்சியில் முறையாக டெண்டர் விடப்பட்டது. ஆனால் அந்த டெண்டரை எல்லாம் ரத்து செய்து விட்டார்கள். அந்த பனி அப்படியே இருக்கு . மேலும் எங்கு பார்த்தாலும் தண்ணீரில் நிரம்பி சாலைகள் நிறைந்திருக்கிறது.சாலையில் சாக்கடையில் நிறம்பி உள்ளது. மக்கள் அந்த வழியாக செல்லுகிறார்கள். கோவளம் நகரில் 4, 5 நாட்களாக தண்ணீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் மேலே வந்துள்ளது. அந்த வழியாக மக்கள் செல்லுகிறார்கள். இந்த பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் என செல்லூர் ராஜீ கூறினார்.