பட்டா பிரச்சனைக்கு தீர்வு காணும் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டம் முப்பது வெட்டி ஊராட்சியில் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த முகாமில் துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பிழைத்திருத்தம் செய்யப்பட்டிருக்கும் ஆணைகளை வழங்கியுள்ளார்.
அதன்பின் அரக்கோணம் தாலுகா, மேல்பாக்கம் ஊராட்சி, அம்மனூர் ஊராட்சி உள்பட மூன்று பகுதிகளின் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்று இருக்கிறது. இதில் அம்மனூர் உள்பட மூன்று ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுமனை தொடர்பாக பட்டா பெயர் மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் செய்யக்கோரி 300-க்கும் அதிகமானோர் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் பலனிராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களைப் பெற்று சரி பார்த்துள்ளனர்.