தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி வரை மீது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளதாவது இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற பகுதிகளிலும், நவம்பர் 3, நவம்பர் 4 ஆம் தேதிகளில் தீபாவளியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் மிக கனமழை ருத்ர தாண்டவமாடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.