முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ஆதிநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். தற்போது வீட்டு சுவர் சேதப்படுத்தப்பட்டது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆதிநாராயணன் சேதப்படுத்தப்பட்ட வீட்டு சுவரை கட்டித் தரக்கோரி அசோக்கிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் ஆதிநாராயணனுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆதிநாராயணன் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அசோக்கை கைது செய்துள்ளனர்.